ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர். அதனால் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பெற்றோர் அனுமதி இல்லாமல் செல்போன்களில் விளையாட்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. தொடர்ச்சியாக ஆன்லைன் வழி விளையாட்டுகளை விளையாடும் போது உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதுகுறித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞர் போக்சோவில் கைது