சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்ய மத்தியக் குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.
தேசியப் பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலர் திருப்புகழ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மத்தியக் குழு, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு சென்னை தேனாம்பேட்டை மண்டலம் ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி தலைமையில் உள்ள சமூகநலக் கூடத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்கள். அதேபோல் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோய்த்தொற்று குறித்த தொலைபேசி ஆலோசனை மையத்தையும் ஆய்வுசெய்தனர்.
கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுசெய்த மத்திய பேரிடர் குழுவினர் இந்த ஆய்வின்போது மத்தியக் குழு உறுப்பினர்கள் மருத்துவர் அனிதா கோக்கர், மருத்துவர் சூரிய பிரகாஷ், மருத்துவர் லோகந்திர சிங், மருத்துவர் விஜயன், சென்னை மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மண்டல சிறப்புக்குழு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கரோனா சிகிச்சை: இருவர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு