நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு தமிழ்நாட்டில் எந்த அளவில் உள்ளது என ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் உயர் அதிகாரி டாக்டர்.திருப்புகழ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட மத்தியக் குழு கடந்த 24ஆம் தேதி டெல்லியிலிருந்து சென்னை வந்தது.
இந்த மத்தியக் குழு சென்னையில் ஒரு வாரத்திற்கு மேலாக தங்கியிருந்து, நோயின் தாக்கம், ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதோடு முதலமைச்சா் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசின் உயர் அலுவலர்களை சந்தித்து ஆலோசனைகளை நடத்தினர்.