தமிழ்நாட்டில் தென்னை மரங்களை வளர்த்து தேங்காய் உற்பத்தியைப் பெருக்க தமிழ்நாடு வேளாண்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. மத்திய தேங்காய் வளர்ச்சி வாரியம் தமிழ்நாடு தென்னைகளை மறு நடவு செய்தல் மற்றும் புத்துணர்வாக்கம் பணிகள் என்ற திட்டத்திற்காக ரூ. 22.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த திட்டத்தினை முதல்கட்டமாக தமிழ்நாட்டில் சிவகங்கை, மதுரை, நாமக்கல், தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2018 - 2019ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறையின் காரணமாக ஐந்து மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது.