சென்னை:பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி இடைநீக்கம்செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது.
விசாகா விசாரணைக் குழு ஒருதலைபட்சமானது
அந்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிராகக் குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது இடைநீக்க உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், தனக்கு எதிரான விசாகா விசாரணைக் குழு ஒருதலைபட்சமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், தானாக முன்வந்து வழக்கை விசாரித்துவந்ததை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், சுட்டிக்காட்டியுள்ளார்.