இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானதான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நிலையிலான பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முற்றிலுமாக கடைப்பிடிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை ஆள்தேர்வு நடத்தும் போது, போதிய எண்ணிக்கையில் ஓபிசி வகுப்பினர் கிடைக்கவில்லை என்றால், நிரப்பப்படாத இடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, அடுத்த ஆள்தேர்வில் சேர்த்து நிரப்ப வேண்டும். ஆனால், ஒருமுறை கூட ஓ.என்.ஜி.சி அவ்வாறு செய்யவில்லை. மாறாக, பின்னடைவுப் பணியிடங்களைக் கணக்கில் காட்டாமல், ஏமாற்றி வந்திருக்கிறது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இந்தச் செயலை உறுதி செய்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கடந்த 14ஆம் தேதி நடத்தவிருந்த விசாரணையை ஓ.என்.ஜி.சி அலுவலர்கள் தவிர்த்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.