திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மொபைல் டவர்கள் அமைப்பதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த லோகநாதன் உள்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு கட்டிடங்களில் மொபைல் டவர் அமைக்க அனுமதியளிக்கும் வகையில் 2001ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை, தனியார் கட்டடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது, அந்த அரசாணையின்படி, மொபைல் டவர் அமைக்க அந்தந்த மாவட்ட அலுவலர்களிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.