தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு - சென்னை

சென்னை: ராயப்பேட்டையில் பட்டப்பகலில் செல்போனை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை சிசிடிவி காட்சிகள் வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செல்போன் பறிப்பு

By

Published : Aug 10, 2019, 1:31 PM IST

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், இன்று காலை கடையில் பொருட்களை வாங்கி கொண்டு சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாள தெரியாத நபர்கள் இருவர், அவருடைய சட்டையில் இருந்த செல்போனை பறித்து தப்பியோடினர்.

செல்போனை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பியோடும் காட்சி

பட்டப்பகலில் செல்போனை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பியோடும் நபர்களை, இருவர் விரட்டிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை வைத்து ஐஸ் அவுஸ் காவல்துறையினர் செல்போன் பறித்த நபர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details