தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியிடம் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட 2 திருநங்கைகள் கைது! - போலீசார் விசாரணை

சென்னை: அண்ணாநகரில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகளை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல் துறையினர் கைது செய்தனர்.

transgender

By

Published : Jul 29, 2019, 8:33 PM IST

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் தீபக் கோயல். இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்திவருகிறார். இவரது மகள் கடந்த 26ஆம் தேதி டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்துச் சென்றுள்ளார். சாந்தி காலனி 5ஆவது தெருவில் அவர் சென்றபோது, அங்கிருந்த இரண்டு திருநங்கைகள், பள்ளி மாணவியை மிரட்டி செல்ஃபோனை பறித்து தப்பி சென்றனர்.

திருநங்கை அம்மு

அதன்பின்னர் செல்ஃபோனை பறிகொடுத்த பள்ளி மாணவி இது குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்ஃபோனை பறித்த திருநங்கைகள் அயப்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சனா, அம்மு என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details