சென்னை அண்ணா நகரில் டி.பிளாக் பகுதியில் ப்ளூ வேல்ஸ் என்கிற மசாஜ் நிலையம் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் பார்லரின் மேனேஜராக சரத் என்பவரும், நிர்மலா,கார்த்திகா,அத்வான்,ஜீடு ஆகியோர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று(ஜன.25) வாடிக்கையாளர் ஒருவர் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கடைக்குள் நுழைந்துள்ளது. அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ஊழியர்கள், வாடிக்கையாளரிடமிருந்து 7 செல்போன்கள், 33 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.