தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் அருகே செல்போன் திருடியவர்கள் கைது! - தாம்பரம் அருகே செல்போன் திருடியவர்கள் கைது

சென்னை: தாம்பரம் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் அருகே செல்போன் திருட்டு
தாம்பரம் அருகே செல்போன் திருட்டு

By

Published : Mar 22, 2020, 9:08 AM IST

சென்னை, தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் மகாகவி பாரதியார் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (23). இவர் இருங்காட்டுக்கோட்டையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவர் நேற்று நள்ளிரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் மூவர் அவரிடமிருந்த செல்போனையும் பணத்தையும் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து விக்னேஷ் உடனே சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் காட்டுக்குள் ஒளிந்திருந்த மூவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

தாம்பரம் அருகே செல்போன் திருட்டு

பின்னர் காவல் துறையினரின் விசாரணையில், திருடிய மூவரும் புது நல்லூர் சோமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் (23), செல்வமணி (27), செல்வம் என்கின்ற செல்லப்பாண்டி (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து குற்றவாளிகள் மூவரையும் காவல் துறையினர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். இவர்களுள் சரவணன் என்பவர் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிறைக்குச் சென்றுவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; குட் பை தமுக்கம் மைதானம்!

ABOUT THE AUTHOR

...view details