தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த இளைஞரிடம் செல்போன் பறிப்பு! - chennai rapido bike taxi

சென்னை: ரேபிடோ பைக் டாக்ஸி புக் செய்த இளைஞரின் ஸ்மார்ட்போனை, பைக் ஓட்டுநர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rapido
rapido

By

Published : Nov 1, 2020, 2:54 PM IST

சென்னை அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கேசவதன்ராஜ் (21), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.

நேற்றிரவு கேசவதன்ராஜ் தனது நண்பர் அருணை சந்திக்க பெரம்பூர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், திரும்பி வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்ஸியை புக் செய்து புறப்பட்டுள்ளார்.

அப்போது பைக் டாக்ஸி ஓட்டுநர் திடீரென்று இருசக்கர வாகனத்தை அயனாவரம் ரயில்வே குடியிருப்பு மைதானம் அருகே நிறுத்திவிட்டு, கேசவதன்ராஜிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பின்னர் கேசவதன் கையில் வைத்திருந்த சுமார் 22 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு அந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோடி உள்ளார்.

இது தொடர்பாக கேசவதன்ராஜ், ஐசி.எப் காவல் நிலையத்தில் ரேபிடோ ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details