தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன் வியாபாரியிடம் செல்போன், பணம் பறித்த மூவர் கைது - சென்னை கிரைம் செய்திகள்

சென்னை கிழக்கு தாம்பரத்தில் மீன் வியாபாரியிடம் செல்போன், பணம் பறித்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மூவர் கைது
மூவர் கைது

By

Published : Oct 16, 2021, 9:00 PM IST

சென்னை: கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி ரங்கராஜன் (71). இவர் தனது நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்காக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் முதியவரை மிரட்டி செல்போன், பணம் கேட்டுள்ளனர். ரங்கராஜன் தர மறுத்ததால் அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் முதியவரை முதுகில் அடித்துள்ளனர்.

இதையடுத்து முதியவரிடமிருந்து 2,500 ரூபாய் பணம், 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முதியவர் ரங்கராஜன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரங்கராஜனின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டனர். அப்போது, செல்போன் தானாக ஆன் ஆனதால் அவர்கள் இருக்கும் இடத்தைக் காவலர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து அரை மணி நேரத்தில் சம்பவ இடத்திற்குச் சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ்(21), கார்த்திக்( 22) மணிகண்டனை ( 21) கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details