திரைத் துறையினருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவித்துள்ளது. இதையொட்டி, திரைத் துறையினர், பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள வைரமுத்து, ”தாதா சாகேப் பால்கே விருதுபெறும் ரஜினிக்கு என் வாழ்த்துக்கள். இந்த விருது அவரது கலைப்பயணத்தின் முற்றுப்புள்ளி என்று கருதிவிடமுடியாது. அடுத்த சிகரம் அடைவதற்கான ஆக்சிஜன் என்று கருத வேண்டும்; அவர் கருதுவார்” என ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல் நடிகர் விவேக் ”அன்பு ரஜினி சார்! என் இதயப்பூர்வ வாழ்த்துகள், கோடானுகோடி ரசிகர்களில் ஒருவனாக, இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே பெற்றமைக்கு வாழ்ததுகள். அன்று குருவுக்கு! இன்று அவர் மாணவருக்கு!” என்று வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.