தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் செம்மரக் கட்டைகள் பறிமுதல் - broadway

சென்னை: மண்ணடியில் உள்ள குடோன் ஒன்றில் ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் செம்மரக் கட்டைகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

ceased,cemmaram

By

Published : Aug 24, 2019, 4:55 PM IST

சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் முகமது(75). இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்துவருகிறார். மண்ணடியில் இவருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது.

அந்த குடோனில் செம்மரக் கட்டைகள் இருப்பதாக பூக்கடை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்றிரவு அங்கு விரைந்த காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது அங்கு இரண்டு டன் எடைக்கொண்ட ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details