சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எஃப். காலனி செல்வியம்மன் நகரைச் சேர்ந்த சேட்டு (60) என்பவர் தனது மனைவி சகுந்தலாவுடன் இருசக்கர வாகனத்தில் அயப்பாக்கத்துக்கு நேற்றிரவு சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையில் திடீரென குறுக்கே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மோதி இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.
அப்போது பின்னால் வந்த லாரியின் பின்சக்கரம் சகுந்தலாவின் உடல்மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியானது. இதனை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.