சென்னை:பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சண்முக முதலியார் தெருவில் பல்சர் (Pulsar Bike) இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் ஒருவர், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது பலமாக மோதிவிட்டு, நிற்காமல் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விபத்தை நேரில் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றபோது அவர்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். பலத்த காயம் அடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.