சென்னை:வேப்பேரி ஈவேரா சாலை காவல் ஆணையர் அலுவலகம் எதிரே கடந்த 27ஆம் தேதி தனியார் பேருந்து ஒன்று சென்றது. அப்போது அந்தப் பேருந்தில் லக்கேஜ் கட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிறு திடீரென கழன்று கீழே விழுந்தது. அந்தக் கயிறு அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் சிக்கியது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த முகமது ஆயூப், ஜோதிராமலிங்கம் ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டு காயமடைந்தனர். தூக்கிவீசப்பட்ட இருசக்கர வாகனம் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஆதிகேசவன் மீது மோதியதில் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.