சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆர்.எம்.கே நகர் பாண்டியன் தெருவில் வசித்துவருபவர் ரவிக்குமார். இவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று(செப் 22) இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ரவிக்குமார் சாப்பிட்டு தூங்கியுள்ளார்.
அப்போது அப்பகுதிக்கு சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரவிக்குமார் வீட்டின் ஜன்னலை திறந்து திருட முயற்சித்துள்ளார். வீட்டில் எதுவும் கிடைக்காததால் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர் அதே பகுதியில் வசிக்கும், கோதண்டராமன் என்பவரது வீட்டில் அனைவரும் தூங்கி இருந்த நிலையில் ஜன்னலை திறந்து ஹேண்ட் பேக்கை எடுத்து அதில் இருந்த ஐந்து சவரன் நகை, 8,000 ரூபாய் பணத்தை அவர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
கோதண்டராமன் காலையில் எழுந்து பார்த்தபோது ஹேண்ட் பேக்கில் இருந்த நகையும், பணமும் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சைக்கிளில் வந்த அடையாள்ம் தெரியாத நபர் ஜன்னலைத் திறந்து நகை, பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவலர்கள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அந்த திருடன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவில் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் வீட்டின் ஜன்னலை திறந்து கொள்ளைச் சம்வங்களில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருவள்ளூரில் பூட்டிய வீட்டில் 13 சவரன் நகை திருட்டு!