சென்னை:தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் சீதாராமன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பு தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது வீட்டின் வெளியே 2 நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் பெட்ரொல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து அவர் சிட்லப்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியிருந்தனர். இந்த நிலையில் சீதாராமன் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.