தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CCTV: பலி வாங்க காத்திருக்கும் பள்ளம் - பதற வைக்கும் காட்சி - chennai

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை ஓரங்களில் துவங்கப்பட்ட மழை நீர் கால்வாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் 10 அடி ஆழ பள்ளத்திற்குள் நிலை தடுமாறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மழை நீர் கால்வாய் பணிகளை சீர் செய்ய வேண்டி சாலையில் படுத்து நூதன போராட்டம்
மழை நீர் கால்வாய் பணிகளை சீர் செய்ய வேண்டி சாலையில் படுத்து நூதன போராட்டம்

By

Published : Jan 12, 2023, 2:43 PM IST

மழை நீர் கால்வாய் பணிகளை சீர் செய்ய வேண்டி சாலையில் படுத்து நூதன போராட்டம்

சென்னை: தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட செம்பாக்கம் 39வது வார்டில் உள்ள திருமலை நகர் பகுதியில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் கால்வாய் இடையே உள்ள கல்வெட்டு மற்றும் சாலை சேதமடைந்துள்ளது.

இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என பலமுறை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை

இந்நிலையில் அவ்வழியாக வந்த கார் அந்த பள்ளத்தில் விழுந்து சிக்கித் தவித்து பல மணி நேரம் போராடி மீட்ட சிசிடிவி காட்சியும், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் அந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் காட்சியும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்று தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல சாலைகளில் சீரமைக்காமலும் மழை நீர் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் இது போன்ற விபத்துகள் அதிகரித்து வருகிறது.

தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட சாலைகளை மற்றும் மழைநீர் கால்வாய்களை சீர் செய்ய வேண்டும் என குரோம்பேட்டை பிரதான சாலையில் படுத்து மாநகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மூத்த குடிமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் அதிகரித்த கடத்தல்கள்.!

ABOUT THE AUTHOR

...view details