சென்னை: பேருந்துகளில் பயணம் செய்கிற பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள், செலவீனங்களை குறைத்து நிதி நிலையினை மேம்படுத்துதல், கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து, பாதுகாப்பான முறையில் பேருந்துகளை இயக்குதல் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துதல், மத்திய அரசின் நிர்பயா திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல், நிலுவையிலுள்ள பணியாளர்களின் பதவி உயர்வு மற்றும் ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்குதல், பணிமனைகளை பழுது நிவர்த்தி செய்து புதுப்பித்தல் மற்றும் கிராமப்புற மக்களின் போக்குவரத்துத் தேவைகளை ஈடு செய்கின்ற வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோச்சிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானதும் அரசு போக்குவரத்துக் கழகத்தின், 6,628 நகர்ப்புற பேருந்துகளிலும் அடுத்த நாளே அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் பணிபுரியும் பெண்கள் மற்றும் உயர் கல்வி பயிலும் மகளிர் உள்ளிட்ட அனைத்து பெண்களும் பயன்பெறுவர். சென்னையில், தற்பொழுது 1,400 சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்திட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பல வழித்தடங்களில் விரைவில் விரிவுப்படுத்தப்படும்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா: ராஜகண்ணப்பன் - cctv cameras fixed in buses for women protection
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அனைத்துப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் பல்வேறு முக்கிய பிரச்னைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
cctvcameras
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அனைத்துப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் பல்வேறு முக்கிய பிரச்னைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பேருந்துகளில் பயணம் செய்கின்ற பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில், மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் வாயிலாக, அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.