தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றவாளிகளுக்கு சிசிடிவி கருவிகள் ஒரு ‘செக் மேட்’ - விஸ்வநாதன் ஆனந்த்! - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: சிசிடிவி கருவிகள் பொருத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நடித்துள்ள 'மூன்றாவது கண்' குறும்படம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை

By

Published : May 11, 2019, 6:42 PM IST

அப்போது பேசிய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ‘சிசிடிவி கருவிகளால் குற்றங்கள் குறைந்துள்ளதோடு பாதுகாப்பாகவும் உணர்கிறோம். இந்த நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளுக்கு சிசிடிவி கருவிகள் ஒரு செக் மேட்’ என்றார்.

குற்றவாளிகளுக்கு சிசிடிவி கருவிகள் ஒரு ‘செக் மேட்’ - விஸ்வநாதன் ஆனந்த்!

பின்னர் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘ஒவ்வொரு 50 மீட்டர் தொலைவிலும் ஒரு சிசிடிவி கருவி பொருத்தும் பணிகளை முடித்துள்ளோம். சிசிடிவி கருவிகள் மூலமாக உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது. காவலர்களின் பணிகளை விரைந்து முடிப்பதற்கு இது உதவியாக உள்ளது. அதேபோல், குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து தகவல் தெரிவிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும். சிசிடிவி கருவிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவே மூன்று குறும்படத்தை வெளியிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details