தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்தது மத்திய குற்றப்பிரிவு காவல் துறை! - pubg madhan for 2 days police custody

பப்ஜி மதனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

pubg
பப்ஜி

By

Published : Jun 23, 2021, 2:39 PM IST

பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி பப்ஜி விளையாட்டை ஒளிபரப்பிய பப்ஜி மதன், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கடந்த 18ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரது யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கங்களை சைபர் கிரைம் காவல் துறையினர் முடக்கினர். இந்நிலையில், பப்ஜி மதனிடம் விசாரணை நடத்த 2 நாள் போலீஸ் காவலில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் எடுத்துள்ளனர்.

மேலும், தோழிகளுக்கு பணம் கொடுத்து ஆபாசமாக பேச வைத்ததாகவும், யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளாரா என்ற பல கோணங்களில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதே போல, மதனின் யூடியூப் சேனலுக்கு அட்மினாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள அவரது மனைவி கிருத்திகாவையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:கைகள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details