தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.எஸ். பாரதியின் இடைக்கால பிணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு - உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால பிணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை மே 29ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கு
ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கு

By

Published : May 27, 2020, 10:46 PM IST

பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பட்டியலினத்தவர்களையும், பத்திரிகையாளர்களையும் அவதூறாக பேசினார். இது குறித்து அவர் மீது மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஓராண்டாக நிலுவையில் உள்ள நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 23ஆம் தேதி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், தனது வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தனக்கு பிணை வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த எழும்பூர் முதன்மை நீதிமன்றம் அவருக்கு இடைக்கால பிணை வழங்கியது.

மே 31 வரை வழங்கப்பட்ட இந்த இடைக்கால பிணையை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், மனுவுக்கு பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details