தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 2 கோடி ரூபாய் மோசடி: டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கைது - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி இரண்டு கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடிசெய்த டெல்லியைச் சேர்ந்த ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

டெல்லியை சேர்ந்த 6 பேர் கைது
டெல்லியை சேர்ந்த 6 பேர் கைது

By

Published : Apr 4, 2021, 6:06 AM IST

சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த சுதா ஸ்ரீதரன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், தனது கணவர் இறந்துவிட்டார். லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகச் சிலர் கூறி, காப்பீட்டுப் பணம் பெற முன்தொகை செலுத்த வேண்டும் என்று நம்பவைத்தனர்.

அதன்படி, தன்னுடைய இரண்டு கோடியே 13 லட்சம் ரூபாயை அவர்கள் மோசடி செய்தனர் எனக் கூறியிருந்தார்.

டெல்லியை சேர்ந்த 6 பேர் கைது

பின்னர் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படையினர் டெல்லி சென்றனர். அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு, அமன்பிரசாத் (29), பிரதீப்குமார் (29), மனோஜ்குமார் (44), குபீர்சர்மா (27), ஹீமன்சு தாஹி (25), ராம்பால் (30) ஆகிய ஆறு பேரை தனிப்படையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details