தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு! - இந்தியாவில் அதிகளவு கரோனா பாதிப்

சென்னை: ஜூலை 5ஆம் தேதி நடத்தப்பட இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)  ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) அறிவித்துள்ளது.

CBSEs CTET exam was postponed
CBSEs CTET exam was postponed

By

Published : Jun 26, 2020, 12:16 PM IST

உலகம் முழுவதும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) கடந்த சில நாள்களாக இந்தியாவில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதன் காரணமாக, கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடக்கவிருந்த பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன.

இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், வரும் ஜூலை ஐந்தாம் தேதி நடைபெறுவதாக இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (CTET) ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வு நடத்துவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தேர்விற்காக விண்ணப்பித்தவர்கள் மேலும் விவரங்களுக்கு www.ctet.nic.in என்கிற இணையதளத்தில் அறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details