தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிற மாநில ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பு.. சிபிஎஸ்இ மண்டல இயக்குநர் வரவேற்பு! - chennai news today live tamil

சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் தமிழை பயிற்றுவிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை வரவேற்பதாக சிபிஎஸ்இ மண்டல இயக்குநர் தினேஸ் ராவ் தெரிவித்தார்.

cbse-zonal-director-of-training-for-teaching-tamil-to-cbse-teachers-welcome
பிற மாநில ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பு - சிபிஎஸ்இ மண்டல இயக்குனர் வரவேற்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 4:07 PM IST

பிற மாநில ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பு - சிபிஎஸ்இ மண்டல இயக்குனர் வரவேற்பு!

சென்னை:“தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்” கீழ் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். சென்னை, சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட பிற வாரிய பள்ளிகளில் தமிழை பயிற்றுவிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை வரவேற்பதாக சிபிஎஸ்இ மண்டல இயக்குநர் தினேஸ் ராவ் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகள் இயக்கநரகம் சார்பில் CBSE, ICSE, IGCSE, IB போன்ற பிற வாரியப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தொடங்கி வைத்தார். அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பிற வாரியப் பள்ளிகளின் தமிழ் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநர் தினேஸ் ராவ் கலந்துக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.

இந்த நிகழ்ச்சி மூலமாக சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் பிற வாரிய பள்ளிகளில் தமிழை பயிற்றுவிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ மண்டல அலுவலராக எனது நன்றிகளை பள்ளி கல்வித்துறைக்கு தெரிவிக்கின்றேன். இதன் மூலமாக தனியார் சிபிஎஸ்இ பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. தமிழை கட்டாய பாடமாக்கி தமிழ்நாடு அரசு மே 23ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை நாங்கள் மனதார வரவேற்கின்றோம்.

தமிழ் கட்டாய பாடமாக வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. மற்ற பாடத்திட்டங்களிலோ அல்லது மற்ற மாநிலங்களிலோ படித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வரும் மாணவர்களுக்கு மட்டுமே பிரச்னை ஏற்படுகிறது. தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்காக தனியாக தேர்வு வைப்பது வரவேற்கத்தக்கது.

மாணவர்கள் தொடக்கத்திலேயே தமிழ் கற்றிருந்தால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இருப்பதில்லை. 8, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு நேராக வந்து சேரும் மாணவர்களுக்கு மட்டுமே பிரச்னை உள்ளது. தற்போது அரசு எடுத்திருக்கும் தமிழ் பாடம் கட்டாயம் என்ற முடிவு வரவேற்கத்தக்கது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:விண்ணிலிருந்து இறங்கிய தங்கக்கிண்ணம்.. ராமோஜி பிலிம் சிட்டிக்கு வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் டிராபி..

ABOUT THE AUTHOR

...view details