சென்னை: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்துச் செய்யப்பட்டதால், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் முறை அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மாணவர்களின் மதிப்பெண்களின் விவரங்களைப் பள்ளிகளில் இருந்து பெற்று மண்டல அலுவலகங்களின் மூலம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்கள் 10,12ஆம் வகுப்பு முடிவுகள் வெளியிடுவதற்கானப் பணிகளில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.