10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 20ஆம் தேதி முடிவடைகிறது. 40 மொழிப்பாடங்கள், 34 இதர பாடங்கள் உட்பட 77 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மொழிப்பாடங்களை தொடர்ந்து முக்கியப் பாடங்களான ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அனைத்து பாடப்பிரிவுகளுக்கான தேர்வு அட்டவணையையும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வு நடைபெறும் நேரத்தையும் கால அட்டவணையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்கும் மாணவர்களுக்கான வினா மற்றும் விடைத்தாள் வழங்கும் நேரம் ஒரே மாதிரியாக இருக்கும்.