தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கு: அறிவியல்பூர்வமாக விசாரணை - சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலீப்

சென்னை: சிபிஐயிடம் இருந்த 103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கில் அறிவியல் பூர்வமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்துவோம் என்றும் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப் தெரிவித்துள்ளார்.

gold theft
gold theft

By

Published : Jan 6, 2021, 4:18 PM IST

சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் மூன்றாவது முறையாக சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று ஆய்வு நடத்தினர். சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப், சிபிசிஐடி ஐஜி சங்கர், சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் மற்றும் சிபிசிஐடி காவல் துறை ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து தடயவியல் துறை நிபுணர்கள் தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை ஆய்வு செய்ய உள்ளனர். கள்ளச்சாவி போட்டு லாக்கரில் உள்ள தங்கத்தை திருடியதாக சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக தடயவியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்நிலையில் அலுவலகத்தை ஆய்வு செய்த பிறகு சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முக்கிய வழக்கு என்பதால் குற்றம் நடந்த இடத்தை பார்வையிட்டுள்ளோம். முதல்கட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றில் அரிதான வழக்கு இது. விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் தொடர்புடையவர்கள் எல்லோருக்கும் சம்மன் கொடுத்து விசாரிப்போம். விசாரணை திட்டம் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. தொழில்நுட்பம், அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. லாக்கர்கள் முழுவதுமாக ஆய்வு செய்து வருகிறோம். உயர் நீதிமன்றம் 6 மாத காலம் விசாரணைக்கு அவகாசம் அளித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க முயற்சி செய்வோம்" என்றார்.

அறிவியல் பூர்வமாக விசாரணை

இதையும் படிங்க:பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட மேலும் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்

ABOUT THE AUTHOR

...view details