சென்னை கெல்லிஸ் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் வங்கி மேலாளராக ரவீந்திரன் சாமுவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது சொத்து ஆவணங்களை ஈடாக வைத்து கடன் வாங்கியுள்ளார்.
கடனுக்கு ஈடாக வைத்த ஆவணங்களை திருப்பித்தர கையூட்டு பெற்ற வங்கியாளர் கைது - சென்னை கெல்லிஸ் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் வங்கி
சென்னை: கடன் பெற்றபோது அதற்கு ஈடாக கொடுத்த சொத்து ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க ரூ. 15 ஆயிரம் கையூட்டாக கேட்ட வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் வாங்கிய கடனை வட்டி, அசலுடன் முழுவதுமாக திருப்பி செலுத்திய பின் ஆவணங்களை திருப்பி கேட்டபோது, அந்த வங்கியின் மேலாளர் ரவீந்திரன் சாமுவேல், வாடிக்கையாளரிடம் கடனுக்கு ஈடாக கொடுத்த சொத்து ஆவணங்களை திரும்பபெற ரூ. 15 ஆயிரம் கையூட்டாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கையூட்டு கொடுக்க விரும்பாத வாடிக்கையாளர் இதுகுறித்து சிபிஐக்கு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சிபிஐ அலுவலர்கள் கொடுத்த அறிவுரையின்படி வாடிக்கையாளர் வங்கி மேலாளருக்கு 7,500 ரூபாய் பணத்தை கொடுக்கும்போது மறைந்திருந்த சிபிஐ அலுவலர்கள் வங்கி மேலாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.