தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயம்: சுரானா நிர்வாக இயக்குநர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

சென்னை: சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சுரானா நிர்வாக இயக்குநர் விஜய்ராஜ் சுரானா, சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயம்
சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயம்

By

Published : Dec 29, 2020, 4:20 PM IST

கடந்த 2012ஆம் ஆண்டு சட்ட விரோத தங்கம் ஏற்றுமதி, இறக்குமதி குற்றச்சாட்டில் சுரானா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திலிருந்து 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கிக்கடன் தொடர்பாக சிபிஐ சீல் வைத்திருந்த 400 கிலோ தங்கத்தை வங்கி அலுவலர்கள் எடை போட்டபோது, 103 கிலோ தங்கம் எடை குறைந்திருந்தது.

இது தொடர்பாக வங்கி தரப்பு அலுவலர் ராமசுப்பிரமணியம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் சிபிஐ சீல் வைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மாயமானது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி சிபிசிஐடியினர் திருட்டு வழக்கு என பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அலுவலராக சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்.பி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (டிச.28) சிபிசிஐடி காவல் துறையினர் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். இதில் புகார்தாரரான வங்கி அலுவலர் ராமசுப்பிரமணியின் தரப்பில் ஒருவர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, தங்கத்தை எடை போடும்போது எடுக்கப்பட்ட 20 நிமிட வீடியோவை சமர்ப்பித்தார்.

இன்று (டிச.29) சுரானா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான விஜய்ராஜ் சுரானா தனது வழக்கறிஞருடன் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்து சென்றார்.

அதில், "சிபிஐ அலுவலர்கள் தங்கத்தை பறிமுதல் செய்த பிறகு தங்கள் நிறுவனத்திற்கும் தங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நிறுவன பெட்டகத்தில் தங்கத்தை வைப்பது என எடுக்கப்பட்ட முடிவு முழுக்க முழுக்க சிபிஐ அலுவலர்களின் முடிவு. தங்கம் மாயமான வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்" என விஜய்ராஜ் சுரானா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தங்கம் வைக்கப்பட்டிருந்த சுரானா அலுவலகத்திற்கு நேரில் சென்று சிபிசிஐடி காவல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதுமட்டுமில்லாமல் சுரானா நிறுவனத்தில் தங்கம் வைக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யவும் சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: காசியின் மீது குற்றப்பத்திரிகை... நண்பரின் பாஸ்போர்ட் முடக்கம்... சிபிசிஐடி அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details