தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வர்களுக்குப் பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 10 நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற சட்டவிரோதமாக சில நபர்களுக்கு இவர்கள் உதவியதாகவும் கூறியுள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்கள் வெளியீடு! - neet forgery
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சிபிசிஐடி, அவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படம் வெளியீடு
ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இவர்களது பெயர் மற்றும் முகவரி தேவைபடுவதாகத் தெரிவித்த சிபிசிஐடியினர், இவர்கள் குறித்த தகவல் பொதுமக்களுக்குத் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் வைத்து தேர்வு முறைகேடு - ஜெயக்குமார் வாக்குமூலம்!