கள்ளக்குறிச்சி:கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கூடிய சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக 50 காவல்துறை அதிகாரிகளை சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் சைபர் கிரைம் நிபுணர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவையும் சேர்த்துள்ளனர். இவர்களின் முக்கிய பணிகள் கலவரம் நடைபெற்ற கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கணியாமூர் தனியார் பள்ளியை சுற்றி எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது..?