பொள்ளாச்சியில் இளைஞர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தனக்கு நேர்ந்த அவலம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கொடூர கும்பலிடம் சிக்கி, கொடுமையை அனுபவிக்கும் காணொளி வெளியாகி பலரையும் கலக்கமடையச் செய்தது. மீண்டும் இந்த விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த கும்பல் குறித்த விவரங்கள் தெரியவந்தன.
முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் - சிபிசிஐடி கடிதம்
சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யாமல் தடுக்கவும், பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழிக்கவும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகிய நால்வரும் கோவை மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியது. இதுபோன்ற காணொளி காட்சிகள் மீண்டும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யாமல் தடுக்கவும், பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழிக்கவும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது.