சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு இயக்குநராகவும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு இயக்குநராக இருந்த பிரதீப் வி. பிலிப் சிபிசிஐடி இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் பணியிடமாற்றம் - குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு இயக்குநர்
12:57 May 26
சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட்டை, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு இயக்குநராக பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு இயக்குநராக மாற்றப்பட்டுள்ள ஜாபர் சேட், 1986ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்து, 1990ஆம் ஆண்டு சென்னை கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.
தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் ஒழுங்கிற்கான பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிபிசிஐடி தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்ற அவர், நீட் தேர்வு முறைகேடு, சமூக ஆர்வலர் முகிலன் காணாமல்போன வழக்கு, டிஎன்பிஎஸ்சி வழக்கு, திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான நில அபகரிப்பு வழக்குகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்துவந்த இவர் இந்தாண்டு டிசம்பர் மாதம் அவர் பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிபிசிஐடி தலைமை இயக்குநராக மாற்றப்பட்டுள்ள பிரதீப் வி. பிலிப், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றி பின்னர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றதையடுத்து, தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 28 நீதிபதிகள் இடமாற்றம்!