தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் சம்பவம்: சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட ஊடகத்திற்கு சிபிசிஐடி எச்சரிக்கை - சிபிசிஐடி எச்சரிக்கை

சென்னை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டவரை சம்பந்தப்பட்ட ஊடகம் உடனடியாக பதவி நீக்கம் வேண்டும் என்றும் இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்றும் சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட ஊடகத்திற்கு சிபிசிஐடி எச்சரிக்கை
சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட ஊடகத்திற்கு சிபிசிஐடி எச்சரிக்கை

By

Published : Jul 4, 2020, 10:40 PM IST

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்ற காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர், இது தொடர்பாக இதுவரை ஐந்து காவலர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இந்நிலையில், செய்தி ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜின் உடல், நெஞ்சுப்பகுதி, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகிவருகின்றன.

ஆனால் மருத்துவர்கள் அளித்த உடற்கூறாய்வு அறிக்கைக்கும் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்களில் உள்ள வெட்டுக்காயங்களுக்கும் சம்பந்தமில்லை எனவும், சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை விசாரிக்காமல் பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஊடகம் பரப்பிவருவதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புகைப்படம் மூலம் விசாரணை தடைப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட செய்தி நிறுவன எடிட்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, இது தொடர்பாக சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் இந்த வழக்கு தொடர்பாக தவறான பதிவுகளை பகிர்வோர் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை பாயும் என சிபிசிஐடி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details