தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் - 4 தேர்வு முறைகேடு - தொடரும் சிபிசிஐடியின் கைது நடவடிக்கை - முக்கியச் செய்திகள்

சென்னை: குரூப் - 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பதினான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவரை சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்

By

Published : Jan 31, 2020, 7:48 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு, தமிழ்நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலரையும் ஒருவர்பின் ஒருவராக சிபிசிஐடியினர் தொடர்ந்து கைதுசெய்து வருகின்றனர்.

இதன்படி இன்று, குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு எடுத்துவந்து விநியோகித்த பொறுப்பாளர் க. மாணிக்கவேல் மற்றும் ஏ. பி. டி பார்சல் சர்வீஸ் வாகனத்தின் ஓட்டுனர் வே. கல்யாணசுந்தரம் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு

கைது செய்யப்பட்ட இந்த இருவரும், முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பதிவு எழுத்தர் ஓம்காந்தன் மற்றும் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமாருக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும், தொடர்ந்து சிபிசிஐடியினரின் கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வில் 39 புதிய தேர்வர்கள் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details