தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிபிசிஐடி மிரட்டலால் சாத்தான்குளம் தொடர்பான வீடியோவை நீக்கிய சுசித்ரா!

சிபிசிஐடி காவலர்கள் தனக்கு போன் செய்து பொய் செய்தியைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்தியதற்காக தன் மீது வழக்குப் பதியப்போவதாக மிரட்டல் விடுத்தனர் என்றும் தனது வழக்கறிஞரின் ஆலோசனையைப் படி சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் குறித்த வீடியோவை நீக்கிவிட்டதாகவும் நடிகை சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

saathankulam suchithra video issue  Suchitra video deleted in twitter  Suchitra video deleted  சுசித்ரா  சுசித்ரா சாத்தான்குளம் வீடியோ நீக்கம்
சிபிசிஐடி மிரட்டலால் சாத்தான்குளம் தொடர்பான வீடியோவை நீக்கிய சுசித்ரா

By

Published : Jul 11, 2020, 1:03 PM IST

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மரணமடைந்த வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் இறப்பு குறித்து சினிமா பிரபலமான சுசித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் துன்புறுத்தப்பட்ட விதம் குறித்து பேசியிருந்தார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1.8 கோடி பார்வைகளையும் , ட்விட்டரில் 20 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது.

இந்த வீடியோவில் பேசப்பட்ட செய்தி பொய்யானது என்றும் அது நிகழ்வுகளை மிகைப்படுத்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அந்த வீடியோ சுசித்ராவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

"பொய் செய்தியைப் பரப்பியதற்காக என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம் என்று சிபிசிஐடி தரப்பில் எனக்கு மிரட்டல் விடப்பட்டது. எனது வழக்கறிஞரின் ஆலோசனைப் படி, அந்த வீடியோவை நான் நீக்கிவிட்டேன். அந்த வீடியோ பிரச்னையை விடுங்கள் அந்த வீடியோவின் வேலை முடிந்துவிட்டது. இந்த வழக்கில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்" என சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் விவகாரம்: இன்று விசாரணையைத் தொடங்கும் சிபிஐ!

ABOUT THE AUTHOR

...view details