தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை பெருநகரில் 15 நாள்களில் 15 நபர்கள் மீட்பு - குற்றத்தடுப்பு பிரிவு தகவல்! - Crimes in Chennai

கடந்த 15 நாள்களில் காணமால் போன 15 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில்
சென்னை பெருநகரில்

By

Published : May 13, 2021, 7:00 AM IST

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக உள்ள நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உத்தரவின் பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையர் தலைமையில் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் காணாமல் போனவர்களை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும், காணமால் போன குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் குழந்தைகள் தடுப்பு பிரிவு காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு கடந்த 15 நாள்களில் காணமால் போன 15நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details