தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை கூடுகிறது காவரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்!

சென்னையில் நாளை (நவ. 23) கானொலி வாயிலாக நடைபெறவுள்ள காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்திற்கு தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்த உள்ளனர்.

நாளை கூடுகிறது 90-வது காவரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்
நாளை கூடுகிறது 90-வது காவரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 7:25 PM IST

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் காவிரி நீர் ஆற்றுப்படுகைக்குட்ப்பட்ட மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில் நாளை(நவ. 23) சென்னையில் கானொலி வாயிலாக காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்று நீரை திறக்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இரு மாநிலங்களிடையே பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து உள்ளதா என்பது பற்றி கணக்கீடு செய்ய இந்த கூட்டத்தில் திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அதேபோல், கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நவம்பர் 1 முதல் 23ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று ஆனை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கர்நாடக அரசு அதனை பின்பற்றியுள்ளதா உள்ளிட்ட விவகாரங்களை அறியவும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நாளை (நவ.22) நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, புதுவை ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கானொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் மெத்தனப்போக்கு குறித்த விவாதம்: எல்லா வருடமும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மறுத்து வரும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்பர். தமிழ்நாடு விவசாயிகளை காப்பதற்காக தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மையிடம் முறையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

அந்த வகையில் இந்த வருடமும் சம்பா சாகுபடிக்கு உச்ச நீதிமன்றத்தையும், காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் சென்று தான் சம்பா சாகுபடிக்கு பயன்படுத்தக்கூடிய நீரை பெரும் சூழலுக்கு தமிழக விவசாயிகள் தள்ளபட்டனர். குறிப்பாக கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,600 கன அடி நீரை கர்நாடக அரசு திறக்க ஆணை பிறப்பித்தது.

அதன்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கபட்டு வந்த நிலையில் எந்தவித அறிவிப்புமின்றி தண்ணீரின் அளவு குறைக்கபட்டது. இப்படி காவிரி மேலாண்மை ஆனையம் பிறப்பிக்கின்ற எந்த உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றாமல் காரணங்களை அடுக்கி வந்தது. இதனால் தமிழக டெல்டா விவசாயிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் நாளை (நவ. 23) மீண்டும் காவிரி நீர் ஒழங்காற்று குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கேரளா, புதுவை உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளதால் காவிரி விவகாரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் விவாதிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படிங்க:அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் ஐடி ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details