காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று காணொலிக் காட்சியின் மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதன் தலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின், உறுப்பினர் நவீன்குமார் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் பொதுப்பணித் துறை செயலர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு சார்பில் பொதுப்பணித் துறை அரசு முதன்மைச் செயலர் கே. மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்ரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். அப்போது, கர்நாடகா மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தது.