தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி - cauvery delta land

சென்னை: டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்  டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  cauvery delta land  cauvery delta district farmers meet tn cm edapadi palanisamy
முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்

By

Published : Feb 10, 2020, 9:48 PM IST

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சரை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், டெல்டா பகுதி விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்

இந்நிகழ்வில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: உழவர் சந்தையில் வியாபாரிகள் காய்கறிகளை விற்க எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details