சென்னை: தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கத்தோலிக்க பேராயர்கள் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 2022ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற உள்ள மறைந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்விற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், "கன்னியாகுமரி மாவட்டம், காற்றாடி மலையைச் சேர்ந்த தேவசகாயத்திற்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்க உள்ளார்.
இந்த நிகழ்வு 2022 மே மாதம் 15ஆம் தேதி ரோம் நகரில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலமைச்சரும் ஆர்வத்துடன் பரிசீலிப்பதாகத் தெரிவித்து உள்ளார்" என்றார்.