தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ்

சென்னை: தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ்
தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ்

By

Published : Jun 3, 2021, 1:19 PM IST

ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில், " பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் உள்ளிட்ட சாதியினர் தங்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில், இது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஜ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு அரசுக்கு 2020 ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அறிக்கை அளித்தது.

இந்த அறிக்கை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த ஒன்றிய அரசு உரிய சட்டத் திருத்தத்தை செய்தது. இந்த சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இதனை, மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சான்றிதழ் வழங்க அதிகாரம் பெற்ற அலுவலர்கள் பின்பற்ற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தினசரி கரோனா பாதிப்பில் முதலிடத்தில் நீடிக்கும் தமிழ்நாடு

ABOUT THE AUTHOR

...view details