சென்னை: சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் இளைஞர்களைக் கண்டறிந்து, தமிழ்நாடு அரசால் கொடுக்கப்படும் விருது, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது. இதனை 2014 ஜூலை 30 அன்று, அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
தொகை உயர்வு

இவ்விருது பதினைந்து முதல் முப்பத்தைந்து வயது வரையிலான மூன்று ஆண்களுக்கும், மூன்று பெண்களுக்கும், விடுதலை நாளன்று வழங்கப்படுகிறது. இவ்விருதானது 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் கொண்டு வழங்கப்பட்டுவந்தது.
தற்போது இவ்விருதின் ரொக்கத் தொகையானது 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.