சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல பேருந்து போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வரும் இக்காலகட்டத்தில் கூட, மக்கள் பேருந்து போக்குவரத்தையே சார்ந்துள்ளனர். இதன் காரணமாகச் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னை மாநகரில் மட்டும் சுமார் 3 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மூலம் ஏற்படும் சாலை விபத்துகளுக்குப் பின் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் மூலமே அதிக சாலை விபத்துகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டு போக்குவரத்து காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 1,000 ரூபாயாக இருந்த அபராதத் தொகை முதல் தவணை 1,000 ரூபாயாகவும் இரண்டாம் தவணை அதே செயலில் ஈடுபட்டால் 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு பேருந்தை ஓட்டியதாகக் கடந்த 10 ஆண்டுகளில் 754 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 ஆயிரத்து 100 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
செல்போன் பேசியவாரு பேருந்து ஓட்டிய ஓட்டுநர்களின் தகவல் சமூக ஆர்வலரான காசிமாயன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான தகவல்களைக் கேட்டுப் பெற்ற நிலையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 21 பேர் மாநகர பேருந்தை செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியுள்ளதாகவும், அவர்களிடம் மொத்தம் 200 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்ற தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
செல்போன் பேசியவாரு பேருந்து ஓட்டிய ஓடுநர்களின் தகவல் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த பழைய அபராதத் தொகையே 1,000 ரூபாயாக இருந்த நிலையில், ஓராண்டில் 21 பேரிடம் வெறும் 200 ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளதும், 2012 ஆம் ஆண்டு முதல் 11.10.2022 வரை கடந்த 10 ஆண்டுகளில் 754 பேரிடம் இருந்து வெறும் 9 ஆயிரத்து 100 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் பேசியவாரு பேருந்து ஓட்டிய ஓடுநர்கள் அபராத விவரம் இதையும் படிங்க: SPEClAL: டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடியின பெண்கள்