சென்னை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தமிழ்நாடு கம்பென்டியம் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸ் எனும் பன்னாட்டு மருத்துவ ஆய்விதழ், நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் கையேடு மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான மாவட்ட உள்ளுறை பயிற்சித் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியல் ஆகியவற்றை வெளியிடும் விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு மத்திய அரசின் கீழ் 86 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களை கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும், இல்லையென்றால் இதனை மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும் என்கின்ற வகையில் கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு இதுவரை பதில்கள் கிடைக்கவில்லை, துறையின் செயலாளர் அவர்கள் இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலைப் பெற்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடருவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.