திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ’தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக 2013ஆம் ஆண்டு அம்மா உணவகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் அம்மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் உணவகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பயணிகளுக்கும், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கும், ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் வகையில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.